Appendix - I (Tamil translated to English)

 பின்னிணைப்பு -1 

(மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையுடன் சிறையிலிருந்த தொம்மந்திருமுத்து புலவர் 1752-இல் எழுதிய வேத சாட்சியின் துயரமான பாடுகள் என்ற ஓலைச்சுவடியில் இருந்த பாடல்கள்) 


1. அருள் மழையால் ஏசுதந்த; ஆதிபரன் வேதமதை மருள் அகற்றி மறையேற்று; மாசரிதை கூறுவோமே. 

2. சான்ற திருக்கண்டன் தனயன்; திரு.தொம்மை முத்தும் அந்தோணிக்குட்டி யொன்று: அருமை அமலக்கண்ணு. 

3. மல்லனென்ற மாயக்குட்டி; மனையாளும் தெய்வானை நல்லதொரு நாராயணன்; நன் மக்கள் பெயராலே 

4. இத்தரையை ஆண்டுவரும்; இணையில்லா மார்த்தாண்டர் அத்தனைக்கும் முத்திரையாய்; அன்பான வாசுதேவன் 

5. தேவகியின் மகனாக; திருவென்ற நட்டாலம் சேவகனின் நற்குடியில்; சிறப்பான நீலகண்டன் 

6.கொடுமைகளை முறியடிக்க; கோயில்களில் வலம்வந்தான் அடிமுறைகள் கைய்யடக்கம்; அனுதினமும் கற்க வந்தான் 

7. களரிபாடம் கற்கவந்தோர்; கனமான பரைக்கோட்டில் இளமுறையின் ஆசான்மார்;; இறுமாந்து கற்றுவந்தார் 

8. சாதி வெறி பேதத்தாலே; சங்கடமாய் வாழ்ந்த காலம் நீதி சான்ற கோட்டைவிளை; நேர்மைகாத்த நாளதிலே 

9. இளைய மன்னர் முடிசூட்ட: எடுத்ததுயர் எத்தனையோ? களைப்பறியா ஓட்டமது; கனதுயரும் நடந்ததங்கே 

10. பிள்ளைமார் பேயாட்டம்; பேதலித்தோர் களியாட்டம் வெள்ளை மனம் பேதலிக்க; வெறியாட்டம் நடந்ததம்மா. 

11. சான்றோர் உறவு முறை; சத்திரியர் திருக்கூட்டம் ஆன்றோர் வரிசையிலே; ஆசான்மார் நூற்றியெட்டு 

12. கரைகண்டர் தலைமையிலே; உண்ணியோரு பண்டாரம் வரை கண்டார் நாடுகாக்க; வளமான இம்மண்ணில் 

13. கோவில்விளை ஆசான்; குடுமியாசான் சாரோட்டார் கோட்டைவிளை யாசான்; கோமேதம் பரைக்கோடார் 

14. பனைவிளையார்க் கூட்டாளி; பக்குவமாம் சரல்விளையார் நினைவிற் பெருமைகொள்ளும்; நிறைவான தச்சன்விளையார் 

15. மாங்கோடு ஆசான்; மல்லன்விளை ஆசான் தாங்காத மூலச்சல்; தவங்காத்தத் தாணிவிளை 

16. பண்டாரவிளை ஆசான்; பார்பெரிய ஈத்தவிளையாசான் ஆண்டிகுமாரபுரம்: அறிவான கொத்தியொடாசான் 

17. உள்ளுவெட்டியாசான்; உயிருள்ள ஆலங்கோட்டாசான் வெள்ளைக்காரவிளையாசான்; வியப்பான கண்ணோட்டார் 

18. களியங்காடாசான்; கவினூறும் குழிவிளையார் நளியடிக்கும் மாவிளையார்; நல்லாசான் பள்ளியாடி 

19. மஞ்சாடியோரு ஆசான்; மாபெரிய தாறாவிளை தஞ்சம் ஆனைக்குழி; தவங்காத்த நெய்யூரார் 

20. புதூர் மின்னலாசான்; புங்கறையூர் நல்லாசான் ஒதூர் உரப்பனையார்; உயர்வான மணவாளர் 

21. காரியா விளையாசான்; கனமான பருத்திவிளை பாரிபோல் பாலூரார்; பண்பான ஏற்றக்கொடார் 

22. நாகக்கோடாசான்; நலமான மாத்தூரார் நாணியார் சாத்தங்கரை; நறுக்கான கறுக்கன்குழி 

23. ஆலன்விளையாசான்; அன்பான கருக்கியாசான் சீலன் கஞ்சிக்குழி; சிறப்பான குளப்பாடு 

24. செல்லங்கோணமாசான்; சீருள்ள கல்லப்பாலம் நல்ல ஆற்றூரர்; நலமான நட்டாலர் 

25. கோணங்கொடாசான்; கூறான சேரமங்கலம் ஓணான் தெங்கன்குழி; உயிரான கிடாரங்குழி 

26. நடுவூர்கரை யாசான்; நலமான முருங்கவிளை நடுந்தடியார் உடையாரும்; நல்லதோர் படுவூரார் 

27. பேயங்குழியாசான்; பெரியதோர் மூங்கில்விளை நாயன் வல்லான்குழி; நலமான ஈத்தாமொழி 

28. கருவிலான் குழியாசான், கருணை குழியான் தோட்டம் அருமை ஈஞ்சக்கோடார்; அழகான தாளக்கன் விளையார்

29. வருக்கைத் தட்டாசான்; வளமான அரசன்குளம் பெரியக் காடவிளை; பேராசான் அழகியபாண்டி 

30. எரியன் விளையாசான்; ஏற்றமுள்ள புல்லுவிளை அரிய பாகோடார்; அன்பான பிலாவிளையார் 

31. புளியன் விளாகமாசான்; புன்னகையார் சருக்கையாசான் எளிய பைங்குளத்தார்; இனிய கீழ்குளத்தார் 

32. அருமனையோராசான்; அவையின் ஆலஞ்சியார் திருமிடாலமாசான்; தீவட்டி மாங்கரையர் 

33. மங்கோடு ஆசான், மாபெரிய மேக்கோடார் தங்க நாலுகெட்டார்; தவமான நெய்யாற்றார் 

34. காப்பிக்காடாசான்; கனமான அதங்கோடார் அப்பி நடுத்தேரி; அறிவான பாலவிளை 

35. புன்னக்காடாசான்; புகழ்பெரியக் காட்டுவிளை இன்னா தருவையாசான்; இனியவர் தேவியோடார் 

36. நிரவக்குழியாசான்; நேடிய மஞ்சாலுமூடார் கரமனையாசான்; கனமான கண்ணொற்றி 

37. உதயன் குளக்கரையார்; உயிரான கோயிக்கத்தோர் இதயக் கோக்குடியார்; இனிய சாலச்சலாசான் 

38. பாணாத்திவிளையாசான்; பக்குவமாம் நெடுமங்காடார் காணப் பாறச்சாலையார்; கவனமான கோட்டுக்கல்லார் 

39. பனச்சமூடாசான்; பக்குவமாம் தெருவளத்தார் ஆன ஈந்திமூடார்; அரசன் சேரியாசான் 

40. செறுவாரக்கோணமாசான்; செயல் அரசர் நூற்றி எட்டே அறுபது ஆயிரமாம்; சேனைவீரர் இன்னுமுண்டு. 

41. பப்புத்தம்பி ராமன் தம்பி; பக்குவமாய் ஆட்சி செய்ய செப்பிநின்றார் செய்தி ஒன்றை; சீரான முரசடித்து 

42. அப்போது வெகுண்டெழுந்தார்; அரியணையன் மார்த்தாண்டர் இப்புவியின் ஆசான்மார்; இனிதழைத்தார் பண்டாரம். 

43. கோட்டவிளைக் கரையில்; கொச்சுராமன் குட்டியாசான் கட்டளையை ஏற்றுக்கொண்டார்; கரைகண்ட முத்தப்பர். 

44. சாரோடு பேராசான்; சான்றத்தாணுமாலையாசான் சரல்விளையார், பனைவிளையார், மாங்கோடார் ஏழுபேரும்

45. மார்த்தாண்டர் முடிசூட்ட; மார்தட்டி களம் இறங்கி சீர்பணியை மேற்கொண்டார்; செயலாக்கம் கண்டிடவே 

46. நூற்றியெட்டு ஆசான்மார்; நொடியிடையில் களம்புகுந்தார் நாட்டினிலே பறந்துவந்தார்; நாயர்படை ஓட்டங்காண 

47. திருத்தொண்டர் அறங்காக்க; திரளான மக்கள்கூடி ஒருதொண்டர் மார்த்தாண்டர்; உயர் முடியும் சூட்டினாரே 

48 . களரிவந்து ஆடிநிற்பார்; கலையான மார்த்தாண்டர் இளம்முறையின் ஆசான்மார்; இகம்மறந்து துள்ளி நின்றார் 49. நீலகண்டர் சிலம்பமாட; நிறையாசான் பண்டாரம் 

காலம்கண்ட தொம்மைமுத்தும்; கரைகண்டு ஆடிநிற்பார் 

50. மார்த்தாண்டர் ஆட்சிபீடம்; மாபெரிய தக்கலையின் கீர்த்திமிகு நாட்டினிற்கே; கிருபையோரு வரம்போன்று 

51. சான்றோரும், ஆரியரும், சகலமான அந்தணரும் வேண்டிடுவர் நாடுவாழ; வேதகால முறையுடனே 

52. வெடிமருந்து கோட்டைகட்டி; வெண்குளச்சல் துறைமுகத்தில் முடியாட்சி தனைக்காக்க; முழு துரையோர் முன்வரவே 

53. தன்படையை வலிமையாக்க; தனி மருந்தின் பீரங்கி வன் துணையாய் கண்டாரே; வலிமையான மார்த்தாண்டர் 

54. உமயம்மை ஆட்சியிலே; ஓடிவந்த நெடுங்காடன் சமயம் பார்த்து அன்றே; சக்தியானார் மார்த்தாண்டர் 

55. இளையடத்துச் சான்றோனின்; இனிதான சீமை தன்னை தனையறுத்துச் சேர்த்துக்கொள்ள; தவங்கொண்டார் மார்த்தாண்டர் 

56. சீமைத்துரை ஓடிவந்தான்; சினங்கொண்டான் மன்னனிடம் ஆமைவேகக் கோபத்தோடு; ஆடிவந்தான் குளச்சலுக்கே 

57. கருங்கலையும் பிடித்துவிட்டான்; தலைநகரும் வந்துவிட்டான் இருபிரிவாய் சேனையெல்லாம்; கிழ மேற்குக்கரையோரம் 

58. ஆங்காங்கே புடைசூழ: ஆசான்மார் குளச்சல் வந்தார் வேங்கையென பாய்ந்துநின்று; வெடிமருந்தை பறித்தனரே 

59. ஆங்காரத் துரையோரை; அடித்துதைத்தார் திட்டமுடன் பாங்கான வெடிக்குழலை; பிடுங்கினரே ஆசான்மார் 

60. பத்துநாள் போராட்டம்; பலதுரையோர் மடிந்திடவே இத்தரையில் மாவீரர்; இனிய வெற்றிதான் கண்டார்

61. சத்தியத்தின் வேதம்காத்த; உத்தமனாம் டிலனாயை இத்தரையின் மன்னனிடம்; இழுத்துவந்தான் நீலகண்டன் 

62. வாய்மை கேட்டு மார்த்தாண்டர்; விடுதலையும் செய்தாரே சேய்போன்று பணிந்தாரே; சீரான டிலனாயும் 

63. உதயகிரி பொத்தையிலே; உயர்வான கோட்டைகட்டி விதம் விதமாய் உழைத்தானே; வீரமகன் டிலனாயும் 

64. மூவரசர் நாடகங்கள்; முறையான வரலாறும் பாவேந்தர் பாடிவர; பவுசாக ஆடிநின்றோம் 

65. தீயோரைச் சாடிடுவார்; நல்லோரைக் காத்திடுவார் பேயோரை விரட்டிடுவார்; பெரியோரைப் போற்றிடுவார் 

66.நாட்டினிலே பஞ்சமாச்சே; நன்மக்கள் துயரானார் வீட்டினிலே முளையரிசி; வீதியிலே பசியாச்சே 

67. கொடுமைக் கொடுமையென்று; கோயிலெல்லாம் தவங்காத்தார் வடுக்கள் மாறவில்லை; வன் கொடுமை நாட்டிலாச்சே 

68. நீலகண்டன் தோழரானார்; டிலனாயும் பேசிடுவார் பாலகாண்டம் கிறிஸ்து தர்மம்; பழகினாரே பிள்ளையுமே 

69. குடும்பநலம் பேசிடுவார்; குதுகலமாய் சேர்ந்திடுவார் எடுபிடியாய் ஏசுதர்மம்; எவருக்கும் சொன்னாரே 

70. தேடிடுவார் டிலனாயும்; தேவதிரு தவம் போற்றி கூடிடுவார் ஆசான்மார்; கோபுரம்போல் ஓரிடத்தில் 

71. தோமைநகர் கோணத்திலே; துரைடிலனாய் பார்வையிலே சீமையெல்லாம் ஒன்றுகூடி; சேவைசெய்தோம் நாம்வாழ 

72. ஏசுதர்மம் நமக்கென்று; ஏற்றமிக்கப் பாட்டுப்பாடி ஆசியுடன் அமர்ந்திடுவார்; அறிவான நீலன்பிள்ளை 

73. நாட்டினிலே நலங்காண; நல்லதிட்டம் பலகண்டார் 

வீட்டினிலே கவலையானார்; வீரன்பிள்ளை சோர்ந்துபோனார் 

74. யோபு வாழ்க்கை சொன்னாரே; யேசுவார்த்தை ஏற்றாரே யோபுவைப்போல் வாழ்ந்திடவே; யோசனையும் கொண்டாரே 

75. சிப்பியினுள் முத்துப்போன்று; சேர்ந்தாரே நீலனுமே தப்பாமல் ஏசுதர்மம்; தவம்காக்கத் துடித்தாரே 

76. அடக்கமுள்ள அந்தணர்போல்; அருமைநீலன் வந்தாரே வடக்கன்குளம் கோயிலிலே; வலியதவம் காத்தாரே 

77. கடவுள்தந்த உதவியென்று கருணைமகன் ஞானஸ்நானம் வடவையிலே நடந்ததம்மா; வணங்கிநின்றோம் அன்னைபாதம் 

78. புதுநன்மைதான் பெற்று; புத்துணர்வு கொண்டாரே இதுவொன்றே போதுமென்று; இறையுணர்வு கொண்டாரே 

79. புவியோர்கள் புரிந்திடவே; புனிதமொழி சொன்னாரே அவையோர்கள் ஏற்றிடவே; அருள்வாக்கு கூறினாரே 

80. மீட்புப்பணி பேசிநின்றார்; மிகவேட்கை கொண்டாரே தாழ்ச்சி தருமம்காத்து; தவனேசு சீடரானார். 

81. சீறிசினங்கொண்டார்; சீர்பெரிய தளவாயும் கூறி தலைநிமிர்ந்தார்; கோப்பெரிய சின்னப்பர்போல் 

82. சண்டாளர் உறவுகொண்டான்; சங்கடமும் நாடகமும் பாழான வேலையாலே; பாவமாக அலைகிறானே 

83. பழிசுமத்த வேண்டாமய்யா; பாரினிலே நம்மவர்தான் வேழ்விமலை ஆபிரகாம்; வீதிகண்ட மோயீசன் 

84. ஆதிபிதாக்களெல்லாம்; அந்தணர்தான் அறியீரோ? ஓதிவரும் சமயமெல்லாம்; ஒருபிதாவின் படைப்பேதான் 

85. உற்றார் உறவினர்கள்; உயர்சாதி என்போர்கள் முற்றும் துறந்தார்கள்; முழுமறையில் கலந்தார்கள் 

86. தந்திரங்கள் பலசெய்தார்; தனதுவழி மேம்படுத்த மந்திரங்கள் பலசெய்தார்; மனம் நொந்தார் மன்னருமே 

87. காப்பை பெரியதிட்டு; கர்த்தனேசு செபம் சொல்லி பாப்பரசர் தந்தகட்டில்; பாங்குடனே மந்திரித்தார் 

88. டிலனாயும் குருகுலமும்; அருளிக்கம் சுமந்துவந்து நலமான செபமாலை; நாளும் செபித்து வந்தோம் 

89, வலுவான அருளிக்கம்; வகையாகத்தான் வைத்தார் சிலுவைபோல் மரம்செதுக்கி; சிரம்சாய்த்த கட்டிலிலே 

90. கொலுவுறங்கி குணம்கண்டார்; கொற்றதிரு மார்த்தாண்டர் அலுவல்புரிந்த பிள்ளை; அரசருக்குழைத்த பிள்ளை 

91. மன்னரையும் பழிசுமத்தி; மாமறையும் செளியெறிந்தார் பொன்போன்ற திருமறையை; புறந்தள்ளிப் பேசினார்கள்

92. கூடிக்கூடி அந்தணர்கள்; முறைகள் பலபேசி சாடினார் தளபதியும்; சமயம்பல பார்த்து 

93. தேவருக்கு நிந்தனைகள்; தினமும் செய்வதேனோ? ஆவாத சண்டாளன்; ஆட்சிபண்ணப் போகிறானே? 

94. பொய்யாய் கதையளந்தார்; புரட்டியே பேசிவந்தார் மெய்போல் புறணிபேசி; மெய்மறையைப் பழித்தார்கள் 

95. பூமியின் தேவரென்று; பூசாரி வாழ்ந்தகாலம் நாமென்ன அந்தணரே; நடுக்கமானார் மன்னருமே 

96. நாமென்ற அந்தணர்கள்; நயமாக பார்த்திருந்தார் ஆமென்று சொல்லவைக்க; அரசரைப் பார்த்திருந்தார் 

97. நீலகண்ட பிள்ளையின் மேல்; நீசப்பழி சுமத்தினார்கள் காலக்கண்டனாகி விட்டான்; காசினியில் நீலகண்டன் 

98. குற்றம் பலசுமத்தி; குலம்நடுங்க முரசறைந்து சட்டம் பலசொல்லி; சாடினார் பிள்ளையின் மேல் 

99. நீலகண்டர் கைதானார்; நிலம்நடுங்க முரசறைந்தார் காலையிலே கைதானார்; காவலர்கள் கொண்டுபோனார் 

100. அரண்மனைக்குள் கொண்டுவந்து; அரசர்முன் நிறுத்தினார்கள் நரநரப்பாய் பற்கடித்தார்; நாயகனைப் பேசவைத்தார் 

101. தோமையார் தோட்டமக்கள்; துயரானார் சிறைகண்டு மாமன் மச்சானும்; மற்றுமுள்ளச் சான்றோரும் 

102. பூமிதடம் நடுங்க; புதுச்சட்டம் சொன்னார்கள் நாமென்ற அதிகாரி; நடுங்கிடவே வந்தானே 

103. புலவர் தொம்மமுத்து; புகலிடமாய் சிறைகண்டார் நிலத்தோர் நிதம்நடுங்க; நீசத்தனம் செய்தார்கள் 

104. தலைநகரில் நடத்திசென்றார்; தம்பட்டம் அடித்துவந்தார் நிலைகுலைய எருக்கலையால்; நெடியமாலை சூடினார்கள் 

105. சந்தைகடையெல்லாம்; சான்றோர்கள் பரிதவித்தார் நிந்தை பலசெய்தார்; நிலம் நடுங்க கூவிநின்றார் 

106. பழிசுமத்தி நகைத்தார்கள்; பரிதவிக்க நடத்தினார்கள் தொழுகைய்யால் துதிபாடி; தூயவனை தவம்கொண்டார்

107. வேள்விமலை வீதியிலே; வேதமகன் நடந்து வந்தார் நாள் இரண்டு எட்டாக; நல்லமகன் நடந்துவந்தார் 

108. மனம்மாற வழியில்லை; மறுவழியும் எண்ணினார்கள் தினந்தோறும் எண்ணியெண்ணி; திருமகனை சிறைவைத்தார் 

109. பத்மநாபர் புரமதிலே; பதினொன்று மாதம் வைத்தார் அத்வேத வித்தகர்கள்; ஆனமட்டும் பார்த்தார்கள் 

110. சொல்லால் அடித்தார்கள்; சூழ்ச்சி பல செய்தார்கள் வல்லோன் பெயர்சொல்லி; வக்கணமாய் புலம்பினார்கள் 

111. சாயம் வெளுக்கவில்லை; சத்தியத்தாய் மகனிடத்தில் பேயும் புறங்காட்ட; பெருமகனார் தவம் காத்தார் 

112. மார்கழியோர் மாதத்திலே; மறைமகனை பிடித்துவந்து கார்எருமைமேல் இருத்தி; காதவழி கொண்டுபோனார். 

113. ஒருமாதம் நடத்தி வந்தார்; உயர்வான கிராமமெல்லாம் திருமகனை நடத்திவந்தார்; திட்டமின்றி சுற்றிவந்தார் 

114. கடலோரம் கொண்டுசென்றார்; காருடைமுள் வீசிநின்றார் உடல்கீற முள்ளடித்து; ஒருமாதம் நடத்திவந்தார் 

115. வட்டாட்சி ஆணையேற்று; வலம்வந்தார் கொடியவர்கள் மட்டற்ற மகிழ்ச்சிகொண்டு; மாமறையைச் சரண மானார் 

116. மறுதலிக்க ஆணையிட்டார்; மக்கள்முன் செபித்துநின்றார் இறைமனதாய் கரங்கூப்பி; இத்தரைக்காய் வேண்டிநின்றார் 

117. பார்த்துநின்ற மக்களினம்; பரனேசு தவம்போற்றி சேர்த்துவைத்த செபம் எல்லாம்; சரித்திரமாய் நடந்தாரே 

118. பழிதீர்க்க காத்திருந்தார்; பத்தினியும் பார்த்தழுதார் விழிதிறக்க இயலாமல்; வத்தல் மிளகெரித்திருந்தார் 

119. உள்நாட்டு கிறிஸ்தவர்கள்; ஓடி எங்கோ ஒளித்தார்கள் எள்ளி நகையாடி வந்தார்; ஏசு தர்மம் நீக்கச்சொன்னார் 

120. துறவியர்கள் வருந்தினார்கள்; துயரமிகு கொண்டார்கள் இறைவா வரம் கேட்டார்; இம்மையிலும் மறுமை கண்டார் 

121. கடியெறும்புச் சாரைக் கூட்டில்; காவலர்கள் போட்டார்கள் துடியாய் கடிகொண்டு; துயரமெல்லாம் காணநின்றார்

122. மலையோரம் நடத்தினார்கள்; மாகடுவாய் எதிரில் வீழ நிலைகுலைந்தார் சேவகரும்; நிறைபேயும் ஆடிவர 

123. சோதனையாய்தான் பேசி; சுத்தமுள்ள சக்தியனார் வேதனையில் ஆழ்த்திடவே; வதைவதைத்து அவர் நடந்தார் 

124. உலகாளும் முறைசொல்லி; உரையாடி உறவாட நலமான வழிசொல்லி; நாயகனை எதிர்கொண்டான் 

125. மூவரசர் வழி சொல்லி; முறையாக வழிநடந்தார் பாவமில்லா வாழ்வுகாண; பக்குவமாய் போதித்தார் 

126. அஞ்சுத்தெங்கு கோட்டையிலே; அடித்திழுத்து வந்தார்கள் அஞ்சாமல் இறைவேண்டி; அடிமைபோல் பணிந்தாரே 

127. அனந்தபுரம் காட்டினிலே; அடித்திழுத்து கொண்டுவந்தார் மனமுடைந்து துணைவியங்கே; மறுகி வழிநடந்து வந்தாள் 

128. மண் விண்ணும் படைத்தவரே; மரிதாயின் புத்திரரே கண்மணிபோல் காத்திடுவார்; கலங்காதே துணையே நீ 

129. என்றருளி மன்றாடி; இணையோடு முட்டூன்றி அன்றாடம் செபம்செய்து; ஆறுதலாய் வாழ்ந்தாரே 

130. அதிகாரி ஓடிவந்தான்; ஆணையிட்டான் ஒருமாதம் இதிகாசம் போல்நடந்து; இரக்கமின்றி அடித்தார்கள் 

131. குரங்கு ஒரு கூட்டினிலே; குனிந்திருக்க வைத்தார்கள் இரங்கி ஒரு கூட்டமக்கள்; எதிரேற்க வந்தார்கள். 

132. பிள்ளையின் துணையாளும்; புலம்பியங்கே மன்றாட வெள்ளைமன தவத்தோனாம்; வேதமிக்கேல் அங்குவந்தார் 

133. ஆண்டவரின் ஆசீரை; அன்பாகப் பெற்றவரே நீண்டதொரு ஆக்கினைமேல்; நீ மோட்சம் சேர்வாயே 

134. எனச்சொல்லி அதிதூதர்; ஏகிச்சென்றார் மோட்சவீடு தனவார்த்தை கேட்டுப்பிள்ளை; தவமகளும் நிறைவானார் 

135. தலைமை இடம் கொண்டுவந்தார்; தக்கலையின் மணலி வந்தார் நிலைமை யங்கே பார்த்தறிய; நெறியாளர் பலரும்வந்தார் 

136. சாரோட்டின் அனந்தன் நாடார்; சான்ற மன்னன் துணையாளர் பாராட்டின் பெருமகனார்; பண்பாட்டின் தொம்மைமுத்தும்

137. தேரோடும் வீதியிலே; திருமகனை காணவந்தார் ஆரோடும் பேசாமல்; அழகுமகன் தொழுதாரே 

138. சான்றத்திரு மணலி; சரித்திரத்தின் ஒரு மணலி ஆன்றத்திரு மகனை; அனியாயச் சூளையிலே 

139. மூன்றுமணி நேரம்; முழங்கால் படிந்தங்கே சான்றாக திருமரியை; சாஸ்டாங்கம் பணிந்தாரே 

140. கொள்ளை பெருநோய்கள்; கொடுமை சகியாமல் உள்ளூர் மக்களெல்லாம்; ஓடிவந்தார் பிள்ளையிடம் 

141. அஞ்சி நடுங்கி மக்கள்; ஆயிரமாய் மடிந்தகாலம் நெஞ்சம் உருகப்பிள்ளை; நெடுநேரம் வேண்டினாரே 

142. கீர்த்தியுள்ள மக்களினம்; கீழ்திசையின் ஞானிகள்போல் நேர்த்திமிக்க ஆண்டவரை; நியாயமுடன் ஆராதிப்போம் 

143. சீடர்களாய் வாழ்வோமே; சிறப்பான ஏசுவிடம் தேடிடுவோம் கண்டடைவோம்; திருவரமும் நமக்காகும் 

144. என்றுசொல்லி போதித்தார்; இறைமுழக்கம்போல் சொன்னார் நன்றாகக் கும்பிட்டு; நாடிவந்தோர் வணங்கி நின்றார் 

145. இருமாதம் இங்கிருத்தி; இன்னல் பல செய்தார் குருநிலமே வாழ்கவென்று; கோமகனார் கும்பிட்டார் 

146. மார்த்தாண்டர் பரிவுகொண்டார்; மா குருக்கள் எதிரானார் பார்த்திபனே விடுகவென்று; பல பெரியோர் கூறினார்கள் 

147. நலிந்து தளர்ந்திருந்தார்; நல்லத் திரமகனார் புலியூர் குறிச்சியிலே; புண்ணியனை நடத்திவந்தார் 

148, சூடானப் பாறையிலே; சூதகர்கள் கொண்டிருத்தி கூடாத மொழிபேசி; கொடியவர் வதைத்தார்கள் 

149. குடிநீர் தாருமென்று; கும்பிட்டுதான் மறுகி வடிநீர்தந்து கிண்டல்; வதைத்தவர்கள் செய்தார்கள் 

150. ஆண்டவரே தாருமென்று; அன்பாய் அடித்தழுதார் வேண்டி உணர்விழந்தார்; வேதன் நீர் சுரந்தார் 

151. கற்பாறை நீர்சுரந்து; கருணைநீர் வழிந்தங்கே பொற்பாதம் கும்பிட்டு; புனிதநீர் பருகினாரே

152. சேவகர்கள் வியந்தார்கள்; செய்வதற்கோ முழித்தார்கள் ஆவதுபோல் வரட்டுமென்று; ஆளூர் வழி போனார் 

153. ஆராச்சார் முன்னிலைக்கு; அழைத்துக்கொண்டு போனார்கள் சீரான பட்டமரம்; சேர்த்துக்கட்டி வைத்தார்கள் 

154. சட்டம் பலபேசி; சதிவேலை செய்தார்கள் பட்டமரம் தளிர்க்க; பயந்தங்கே நின்றார்கள் 

155. ஆண்டிபோல் ஆராச்சார்; அன்பாகப் பிள்ளையிடம் வேண்டினார் குழந்தைக்காய்; வினயம் நிறைந்திடவே 

156. கல்வாரி பாடுசொல்லி; கடுந்தபசு காத்தபிள்ளை எல்லோரும் வாழ்ந்திடவே; இரக்கமாக வேண்டினாரே 

157. இராமன்புதூர் சீமையிலே; இரவானநேர சாமமதில் பரலோகத் திருக்குடும்பம்; பரிவுடனே வந்ததம்மா 

158. உத்தமியாள் தேடிவர; உறுதிமொழி கூறியவர் நித்தியமாய் பரம்சேர; நீதிமொழி பேசினாரே 

159. கைதுசெய்த நேரகுரு; கனசீமை தலைவரானார் தீது முறைசெய்தி கேட்டு; தேடிவந்தார் கோட்டாறு 

160. நலங்கள் பலபேசி; நல்லாசீர் தந்தகுரு விலங்கை கையிலேந்தி; வினயமுடன் முத்திசெய்தார். 

161. அஞ்சாமல் நஞ்சருந்த; வஞ்சகர்கள் சதிசெய்தார் 

தஞ்சம் எனக்கருதி; தாய்மரியாய் தான் அருந்தி 162. நாட்டின் தெற்கெல்லை; நலமான ஆரலுக்கு 

கோட்டை வாசலிலே; குருமகனை கொண்டு வந்தார் 163. அன்னவரின் அதிகாரி; அன்பான பிள்ளையைத்தான் சொன்னபடி நடுங்கிடவே; சீலாந்தி மரத்தில் கட்டி 

164. எண்ணரிய மக்களங்கே; எப்போதும் கூடினாரே மண்ணின் புனிதனென்று; மக்கள் வந்து மண்டியிட்டார் 

165. சேவகரை எதிர்த்தார்கள்; சீறிநின்றார் மக்களங்கே நாவில் அடித்தார்கள்; நாடுவாழி தனைப் பழித்தார் 

166. உன்னம் பலவைத்தார்; உறுதி மிகத்தான் கொண்டார் மன்னன் அறியாமல்; மரணக் குறிதான் வைத்தார் 

167. டிலனாயும் சந்தித்தார்; நேரிடையாள் கூடிவந்தாள் நலமான நண்பர்களும்; நல்லகுரு நாதரோடு 

168. ஞானகுரு நாதர் வந்தார்; ஞாலத்தோர் வேண்டிநிற்க போனஆடு மீட்சிபெற; புவியோர்கள் அதிசயிக்க 

169. ஒருசந்தி தவம் காத்தார்; உயர்வான நோம்பு காத்தார் குருமரபின் நன்மைதந்து, குணமான ஆசீர் பெற்றார் 

170. சரணம் சரணமய்யா; சத்தியமே ஏசு போற்றி மரணம் எதிர்பார்த்தார்; மன்றாடி தவம் காத்தார் 

171. சங்கும் முழங்கவில்லை; சப்தம் செய்யவில்லை எங்கும் மௌனமாச்சு; எழுந்து நடக்க சொன்னார் 

172. சிங்காரம் அங்கு வந்தார்; சீவாயி புடைசூழ தங்கும் மௌனத்திலே; தள்ளாடி அவர் நடந்தார் 

173. கூட்டி நிறுத்தினார்கள்; குறைசொல்லி சிரித்தார்கள் எட்டி சுடுவதற்காய்; எடுத்தார் வெடிகுழலை 

174. துரைதனத்தார் செய்தகுழல்; துவக்கவிழா நடந்ததம்மா தரைதனிலே செய்தகுழல்; தலைவன்மேல் பாய்ந்ததம்மா 

175. தீவெட்டி வெளிச்சத்திலே; தீவிரமாய் நின்றார்கள் ஆவட்டும் எனசொல்லி; ஆகவைத்தான் அதிகாரி 

176. மூன்றுவெடி பாய்ந்திடவே; முன்கமிழ்ந்தார் பிள்ளையவர் சான்று தேடிநின்றார்; சரிசெய்தார் குழல்தனையே 

177. திருப்பியேச் சுட்டார்கள்; திருமகனார் சிரம் சாய்ந்தார் குரபரனைக் கூப்பிட்டார்; கும்பிட்டே மரணமானார் 

178. மலைமேல் ஒளிவீச; மறுஉலகோர் வந்தார்கள் சிலைபோல் சேவர்கள்; சிதறியே ஓடினார்கள் 

179. பாறை மடியடிக்க; பாங்காய் திரியெரியக் குறையில்லா ஆத்துமத்தை; குடும்பவானோர் எடுத்தாரோ 

180. கூட்டாளி சூத்திரர்கள்; கூடியுள்ள வெள்ளாளர் சுட்டார்கள் விறகடுக்கி; சுத்தமான பிள்ளை உடல் 

181. நாட்டில் அமைதியில்லை; நாடார்கள் கொலையானார் வீட்டில் அண்களில்லை; வீதிவிட்டார் ஆசான்மார் 

182. சுடுகாடுபோல் நாடு; சூழ்ச்சியிலே சிக்குண்டு நடுநிலையுந் தடுமாறி; நாளும் துயர்கொண்டு 

183. அறிந்தார் கிறிஸ்தவர்கள்; அதிகாரத் திருமறைமுன் பறந்தார் ஏடெழுதி; பக்குவமாய் அடக்கிடவே

184.உள்நாட்டு குருகுலமும்; உயர்வான டிலனாயும் உள்நாட்டு திருமறையோர்; ஒன்றுகூடி திட்டமிட்டு 

185. கோட்டாறு பீடத்திலே; குழிதோண்டி கல்கெட்டி நாட்டாறுபோல் கூடி; நல்லோனை அடக்கினரே 

186. கூட்டாளிக் கூட்டமின்றும்; குருமகனை நினைத்தழுது வாட்டமுடன் கரங்கூப்பி; வணங்கித்தான் நிற்குதம்மா 

187. மறைந்த மறையோர்கள்; மாகாண ஏசுதர்மம் நிறைவான ஏசவின்முன் நீடியநாள் வாழ்ந்திடவே 

188. சிறந்த மனிதரெல்லாம்; செபத்தாலே கையெடுத்தார் அறிந்த தபசினோரும்; அனுதாபம் காட்டினாரே 

189. மன்னர் வாழ்கவென்று; மாமறையும் வாழ்கவென்று இன்னல் அழிகவென்று; இகமே வாழ்கவென்றோம் 

190. சான்றோன் தொம்மன்திரு; குட்டியென்னும் முத்தப்பன் இன்றே எழுதிவைத்தேன்; இந்தத் திருஅம்மானை. 

(1752)


-------------------------------------------------------------------------------------------


[The poems in the palm leafs (Olai suvadi) titled 'Veda Satchiyin Thy aramana paadugal' written by Thomman Thirumuthu Pulavar in 1752, the one who was in jail with the Martyr Devasahayam] 


1. ArulMazhaiyal, Yesudhantha; Aathiparanvethamathaimarul Agattimaraiyattu; maacharithykuruvomae 

2. Chantathirukkandanthanayan; thiruthommaimutthum Anthony kuttyyondru; arumaiamalakkanu. 

3. Mallanaentamaayakkutty; manaiyalumdeivanai Nallathorunarayanan; nan makkakpaeyaralae 

4. EttharaiyaiAanduvarum; enaiellamarthandar Attanaikummutthiraiyar; anbana Vasudevan 

5. Devakiayinmahanaga; thiruvendanattalam Sevaganinnarkudiyil; chirapananelakandai 

6. Kodumaikalaimuriyadikka; kovilkalilvalamvanthan Adimuraikalkaiyadakkam; anuthinamumkarkavanthan 

7. Kalaripaadamkarkavanthor; kanamanaparaikkottil Elamuraiyin Aasanmar; erumaanthukattuvanthar 

8. Chathivaeripaethatthalae; chankadamaivalatha kalam Neethichandakottaivilai; nermaikatthainazhathilae 

9. Elaiya mannarmudisutta; eduthiyar Etthanaiyo? Kalaipariyaottamathu; kanathuyarumnadanthathankkae 

10. Pillaimarpaeyattam; paethatthorkaliyattam Vellai manampaethakka; vaeriyattamnadantthatham 

11. Chandoruravu murai; chatthiriyarthirukuttam Andorvarichailae; Ansanmarnuttiyeddu 

12. Karaikandarthalaimailae; unniyorupandaram Varykandarnaadukakka; valamanaimmanil

13. KovilvilaiAasan; kudumiyasancharottar Kottaivilaeyaran; komerethamparaikodar 

14. Panaivilaiyarkuttali; pakkuvanamcharalvilaiyar Ninaivirpaerumaikollum; niraivanathatchanvilaiyar 

15. Manakkodu Aasan; mallanvilaiaasan Thaankathamulachal; thavakkatthathaanivilai 

16. Pandaravilaiaasan; paarpaeriyaetthavilaiyaasan Aandikumarapuram; Arivanakottiyodaasan 

17. Vuluvettiyasan; vuyerulla Aalankottasan Vellaikkaravilaiyaasan; viyappanakannottaer 

18. Kaliyanakkadaasan; kavinuramkuzhiviliyar Naliyadikummavilaiyar; nallasanpalliyadi 

19. ManjadiyoruAasan; maapaeriyatharavilai ThanjamAanaikuzhi; thavakkatthaneyyorar 

20. Puthurminnalasaan; punkaraiyornallasaen Othururappanaiyar; Vuyorvanamanvaalor 

21. Kaariyaavilaiyasaan; kanamanaparutthivilai Paaripolpalurar; panbhanayettakkodaar, 

22. Nagakkodasaan; nalamanamathura Naaniyarchatthankkarai; narukkanakarukkankuzhi 

23. Alanvilaiyasaan; Anbanakarukkiyasnan Sedan kanchikuzhi; chirappanakulappadur 

24. Chellankonamasaan; cherullakalappalam Nallaattoorar; nalamanairattalar 

25. Konakkodasaan; kooranacheramangalam Onaanthenkankuzhiullenakidarankkuzhi 

26. Naduvoorkeraiyasaan; nalamanamurunkavilai Nadunththadiyarvudaiyarum; nallathoorpadivoom 

27. Paeyakkuzhiyasaan; paeriyathormunkivilai Nayanvallankuzhi; nalamana Etihamozhi

28. Karuvilankuzhiyasaan; karunaikuzhiyasaanthottam Arumaienjakodar, azhaganathalakkannvilaiyar 

29. varukkai thattaasaan; vazhamanaarasankulam Paeriyakaadavilai; paerarsan Azhagiapandi 

30. Yaeriyanvilaiyaasan; yettamullapulluvilai Ariya paakodar, anbanapilavilaiyar 

31. Puliyanvilagamaasaan; punnagaiyarcharukkaiyasaan Yaeliyapainkulathur; iniyakilkulatthar 

32. Arumanaiyorasaan; avaryinalanchiyar Thirumidalamaasaan; theevattimankkaraiyar 

33. MankkoduAasan; mapaeriyamekkodar Thankanalukettar; thawamananeyyatar 

34. Kappikadasan; kanabanaathankkodar Appi nadutthaeri; arivanapalavilai 

35. Punnakadasaan; pukalpaeriyakattuvilai Inna tharuvaiyasaan; iniyavardeviyodae 

36. Niravakuzhiyasaan; naediyamanjalumoodar Karanaiyasaan; kanamanakannoti 

37. Uthayankulakkaraiyar; ueranakoyekkathoor Ithayakokkudiyar; iniyachalacalasaan 

38. Paanathivilaiyaasan; pakkuvamaineolumakkadar Kaanapaarachalaiyar; kavanamanakottukallar 

39. Panachamoodashan; pakkuvamautheruvalattarseriyasaan Aanaenthimoodar; arasanseriyasaan 

40. Cheruvarakonamasaan; cheyalarasarnutti Yettae ArupattuAayeramam; senaiveerarinnumundu 

41. Paputhampi Ramanthampi; pakkuvamaiAadchiseiya Scippi ninrarseithiondrai; cheranamurachaditttu 

42. Appothuvekundaelunthar; Ariyanaiyinmarthandar IppuviyinAasanar; inithalaitharpandaram

43. Kottavilaikaraiyil; kolzhuramankottiyasaan Kattalaiyaiyettukondar; karaikandamutthappar 

44. Charodupaerasan; chantathanemalaiyasan Charalvilaiyar, panaivilaiyar, makodaryeluperum 

45. Marthandarmudisuttasutta; marthatti kalam iranki Cherpaniyaimayirkondar; cheyalakkamkandidavae 

46. NuttiyedduAasaanmar; nodiyedayil kalam pukenthar Nattinilaeparantuvanthar; nayarpadaiottakkana 

47. Thiruthondararamkakka; thiralanamakkalkudi Oruthondarmarthandar; uyar medium suttinarae 

48. kalari vanthuAadinirpar; kalaiyanamarthandar Elam muraiyinAasanmar; elammaranthuthullinindar 

49. Neelakandarchelambhamaada; niraiyasaanpandaram Kalamkandathommaimuthum; karaikanduAadinirpar 

50. MarthandarAadchipadam; maperiyathuckalayin Kerthimekunattinikkae; kirubaiyoruvarampondru 

51. Saantorumaariarum; sagalamaanaanthanarum Vendiduvarmaaduvaazha; vedhakaalamuraiudanae 

52. Vedimarunthukottaikatti; venkulachalthuraimugathil Mudiyaatchithanaikaakka; muzhuthuraiyormunvaravae 

53. Thanpadaiyaivamaiyaakka; thanimarunthinpeeranki Van thunaiyaikandaarae; vamaiyaanmaarthandar 

54. Umayammaiaatchiyilae; odivanthanedungaadan Samayampaarthuantrae; sakthiyaanaarmaarthaandar 

55. Izhaiyadathu saantonin; inithaanaseemaithannai Thanaiyaruthuserthukolla; thavangondaaemarthaandar 

56. Seemaithuraiodivanthaan; sinangondaanmannanidam Aamaivegakobathodu; aadivanthaankulachalukae 

57. Karunkalaiyumpidithuvittaan; thalainagarumvanthuvittaan Irupirivaaisenaiellam; kezhamerkukariyoram!

58. Aankaankae pudaizoozha; aasanmaarkulachalvanthaar Vengaienapaainthunintru; vedimarunthaiparithanarae 

59. Aaankaara thuraiyorai; adithudhaithaarthiittamudan Paangaanavedikuzhalai; pidunginaraeaasanmaar 

60. Pathunaal poraattam, palathuraiyormadinthedavae Iththaraiyilmaaveerar; iniyavetrithaankandaar 

61. Sathyathin vedhamkaaththa; uththamaamdilanaayai Iththaraiyinmannanidam; izhuthuvanthaanneelakandan 

62. Vaaimaikaetrumarthandar; viduthalaiyumseithaarae Sacipontrupaneenthaarae; seeraanadilanaayum 

63. Udhayagiripothaiyilae; uyarvanakottaikatti Vidhamvidhamaayiuzhaithaanae; veeramagandilanaayum 

64. Moovarasarnaadagankal; muraiaanavaralaaru Paavendharpaadivara; pavusaagaaadinintrom 

65. Theeyorai saadiduvaar, nalloraikaathiduvaar Peyoraivirattiduvar, periyoraipottriduvaar 

66. Nattinalae panchamaachae; nanmakkalthuyaraanar Veetinilaemuzhaiyarisi; veethiyilaepasiyaachae 

67. Kodumai kodumaientru; koilellamthavangaathaar Vadukkalmaaravillai; van kodumainaattilaachae 

68. Neelagandan thozharaanaar; dilanaayumpesiduvaar Paalagaandamchristudharmam; pazhaginaaraepillaiyumae 

69. Kudumbanalumpesiduvaar; kuthugalamaayisernthiduvaar Edupidiyaaiyesudharnam; evarukkumsonnaarae 

70. Thediduvaar dilanaayum; dhevathiruthavampotri Koodiduvaaraasanmaar, kopurampoloridathil 

71. Thomainagarkonathilae; dhuraidilanaayipaarvaiyilae Seemaiellamontrukoodi; sevaiseidhomnaamvaazha 

72. Yesudharmam namakentru; yettramikkapaattupaadi Aasiyudanamarnthiduvaar; arivaananeelanpillai

73. Naatinilaenalankaana; nallathittampalankandaar Veetinilaekavalaiyaanar; veeranpillaisornthuponaar 

74. Yobuvaazhkaisonnaarae; yesuvaarthaiaetraarae Yobuvaipolvazhnthiduvae; yosanaiyumkondaarae 

75. Sippiyinulmuthupontru; sernthaaraeneelanumae Thapaamalyesudharmam; thavamkakkathuditharae 

76. Adakkamullaanthanarpol; arumaineelanvandharae Vadakkankulamkoilae; vayathavamkaathaarae 

77. Kadavulthanthaudhavienteu; karunaimagannjaanasnaanam Vadavaiyilaenadanthadhamma; vananginintromannaipaatham 

78. Puthunanmaithaan petru; puththunarvukondaarae Ithuvontraepothumentru; iraiyunarvukondaarae 

79. Puviyorgal purinthidavae; punithamozhisonnarae Avaiyorgalaetridavae; arulvaakukorinaarae 

80. Meetpupanipaesinintraar; migavetkaikondaarae Thazchitharumamkathu; thavanesuseedaraanaar 

81. Cheerisinankindaar; seerperiyathalavaaiyum Koorithalainumirnthaar; kopperiyachinnapparpol 

82. Sandaalaruravukondaan; sangadamumnaadagamum Paazhaanavelaiyaalae; paavamaagaalaigiraaanae 

83. Pazhisumathavendamaiyaa; paarinilaenammavarthaan Vezhvimalaiabraham; veethikandamoeesan 

84. Aathipithaakalellaam; anthanarthanarieero? Othivarumsamayamelllam; orupithaavinpadaipaethaan 

85. Uttar uravinargal; uyarsaathienporkal Mutrumthuranthaargal; muzhumaraiyilkalanthaargal 

86. Thanthirangalpalaseithar; thanathuvazhimempadutha Manthirangalpalaseithar; manamnonthaarmannarumae 

87. Kaapaiperiattu; karthanaesusebam sol Paaparsarthanthakattil; paangudanaemandhirithaar

88. DilanaayumGurukulamum; arulikamsumanthuvanthu Nalamaanasebamaalai; naalumsebithuvanthom 

89. Valuvaanaarulikam; vakaiyaakathaanvaithaar Siluvaipolmaramsethuki; siramsaaithakattilae 

90. Koluvurangigunamkandaar, kotrathirumaarthaandar Aluvalpurinthapillai; arasarykuzhaithapillai 

91. Mannaraiyumpazhisumathi; maamariyumselierinthaar Ponpontrathirumaraiya; puranthallipaesinaargal 

92. Koodikoodianthanargal; muraigalpalapaesi Saadinaarthalapathiyum; samayampalapaarthu 

93. Dhevarkuninthanigal; thinamumseivathaeno? Aavaathasandaalan; aatchipannapogiranae 

94. Poiyaaikathaiyalanthaar; purattiaepaesivanthaar Meipolpuranipaesi; meimaraiyaipazhithaargal 

95. Boomiyindhevarentru; poosaarivaazhnthakaalam Naamennaanthanarae; nadukamaanarmannarumae 

96. Naamentraanthanargal; nayamaagapaarthirunthaar Aamentrusollavaiku; arasaraipaarthirunthaar 

97. Neelakandapillayinmael; neesapazhisumathinargal Kaalakandanaakivittam; kaasiniyilneelakandn 

98. Kutrampalasumathi; kulamnadungamurasarainthu Chattampalasol; saadinaarpillaiyinmael 

99. Neelakandarkaithaanaae; nilamnadungamurasarainthoar Kaalaiyilaekaithaanaar; kaavalargalkonduponaar 

100. Aranmanaikulkonduvanthh; arasarmumniruthinaargal Naranarapaaiparkadithaar; naayaganaipaesavauthaar 

101. Thomaiyar tottamakkal; thuyananarsiraikandu Mamanmachanum; mattummulaqsanthorum 

102. Boomithadam nadunga; puthusattamsonnargal Naamentaathigari; nadingidaveavanthanea test

103. Pular themmamuthu; pugadamaisiraikandar Nilathoornithamnadunga; nisathannamseitharkal 

104. Thalainagaril nadathisentar; thampattamadithivanthaar Nilaigulayayerugkalaiyal; nediyamalaisutinargal 

105. Chanthaikadaiellam; santorgalParrithavirthar Ninthaipalarseithar; nilamnadungakuvinintaar 

106. Pazhisumathi nagaithargal; parithavikanadathinargal Tozhukaiyalthothipadi; thoyavanaithavamkondar 

107. Vezhvimalai vithiliea; vethamagannadanthuvanthar Nalrenduyettaga; nalamagannadanthuvanthaar 

108. Mannamara vazhillai; maruvazhiumyenninarkal Thinamthorumyenniyenni; thirumaganaiseraivaithaar 

109. Pathmanaapar puramathilea; pathinontumathamveithar Athvedavithakarkal; Aanamatumpaarthargal 

110. Sollal adithargal; suzhichi palar seithargal Vallon pearsollu; vakanamaipulampinargal 

111. Sayam vezhugavillai; sathyathaimanaganidathil Poiumpurankata; perummaganarthavamkathaar 

112. Margaliyo mathathilea; maraimaganipidithuvanthu Kaaryearumaimealiruthi; kathavazhikonduponar. 

113. Orumatham marathi vanthaar; uyarvanakiramamellam Thirumaganainadathivanthaar; thitamintisutivanthaar 

114. Kadalooram kondudentar, karudaimuzhvisinintaar Udalkeeramuzhadithu; orumathamnadathivanthaar 

115. Vattachi aanaiyittu; valamvanthaarkodiyavargal Mattaratamagizhichikondu; mamaraiyasaranamanar 

116. Maruthakka aanaittaar, makkalmunjebithuninyaar Iraimanathaikarankuppi; itharaikaivendinintaar 

117. Paarthuninta makkalinam; paraneisuthavampottii Seruthivaithajebamellam; sarithitamainadantharai 

118. Pazhithirika kathuirinthai; pathuniumparthuazhuthar Vilithirakayealamal; vathalmizhaguyerithirinthal 

119. Ullnatuchiristuvaragal; podi yengoozhithargal Yellinagaiyadivanthaar; yesutharmamnikkasonmar 

120. Thoraviyarkal varunthinarkal; thouarukmigukondargal Iraivavaramkettar; imailummarumaikandaar 

121. Kadiyearumpu saraikudil; kavalarkalpottarkal Thodiyaikadikondu; thuyaramellamkananintaar 

122. Malaiyoram nadathinargal; makaduvaiyeathirilvezha Nilaikulanthardeavakarum; niraipeumaadivara 

123. Sothanaiyaithan pesi; suthamullqsakthiyanar Vethainillazhthidavea; vathaivaithaithuavarnadanthar 

124. Ulagalum muraisollu; uraiyadiuravada Nalamanavazhisollu; nayakanaiurthirkondaan 

125. Moovarasar vazhisollu; muraiyakavazhinadanthaar Pavamillavazhukana; pakkuvamaipothitthar 

126. Anjuthogu kodaililea; adithizhuthuvanthargal Anjamaliraiveandi; adimaipolpaninthatea 

127. Anandhapuram kattinilea; adithizhuthukonduvanthaar Manamudainthuthunaiviyengaeaa; marigivazhinadanthuvanthal 

128. Manu vinnumpadaithavarea; marithainpuththiraro Kanmanipolkathuduvaar, kalangathaithunayea ne 

129. Yentaaruzhi mantadii; inaiyodumudunti Antadamjepamseithu; aaruthalaivazhntharai 

130. Athigari odivanthaan; anaiiddanorumatham Ithikasampolnadanthu; iragamintiadithargal 

131. Korangu orukuttinilea: kunithuirikaveitharkal Irangiorukuttamakkal; yeathirokkavantharkal 

132. Pillaiin thunaiyalum; pulampiengeamantada Velaimanathavathonam; vethamikealanguvanthaar 

The Seed Sown in the South / Kumari Aathavan/178 

133. Anandavarin asirai; anbakapettavarea Nintathoruaginimeal; nemotschamsservayae 

134. Yenasollu aadthithoothar, yegisentarmooschaveedu Thanavaarthaikettuppilai; thavamagalumniraivanaar 

135. Thaimai idamkonduvanthaar, thuckalaiyin mana vanthaar Nilamaiengeapaarthuariya; neriyalarpalarumvanthaar 

136. Sarotin anandhannadar; saanta mannan thunaiyalar Paratinperumaganar; panpatinthomaimuttum 

137. Thearodum vithileaa; thirumaganaikanaavanthar Aarodumpeasamal; azhagumagantozhutharea 

138. Santathiru mana; sarithirathinoru mana Aantathirumaganeaii; aniyaiisuzhalaila 

139. Moontumani neram; mulankaalppadinthaigai Santagathirumariea; sustangampanitharea 

140. Kozhai perunnoikal; kodumaisagiyamal Ullqoormakkalellam; oddivantharpillaidam 

141. Anji nadinkimakkal; airamaimadintha kalam Nenchamurugapillai; neaduneeramveandinareaa 

142. Keerthiullq makkalinam; kelthisayinnjanikalpol Nerrithinikkaanindavarea; njayamudanarathippom 

143. Serarkazhaii vazhvomea; sirappanayesuvidam Teadiduvomkandaivoom; thiruvaramumnamakgakum 

144. Yentu sollupothithaar; iraimozhakampolsonnar Nantagakumpitu; nadivanthoorvananginintaar 

145. Irumatham ingirithi; innalpalaseitharr Kurunilameavazhgaventu; komaganarkumpitar 

146. Marthandar parigkondar; ma gurukalyeathiranai Parthipanaividugaventu; palaperiyorkurinarkal 

147. Nandhu thalarnthuirnthar; nalathiramaganar Puyoorkurchilea; puniyavanainadathivanthar

148. Soodana paarileaea; soothakargalkonduirithi Kodathamozhipeasi; kodiyavarvathaithargal 

149. Kudineer tharumenti; kumpitutanmarugi Vadineerthanthukindal; vathaithavarkalseithargal 

150. Andavarea tharumenti; anbaiadithithazhuthaar Veandiunarvilanthar, veathanneersuranthaar 

151. Karaparai neersuranthu; karunaineervazhithangea Porpathamkumpitu; punithaneerparuginarea 

152. Sevakarkal viyanthargalseithavattugomulithargal Avathupol varatumentu; aazhoorveazhiponar 

153. Arasir munnileaiki; azhaithukonduponargal Cheerananpattamaram; seruthukettiveaithargal 

154. Sattam palapeasi; sathivelaiseithargal Pattamaram thazhirka; bayanthangeaanintargal 

155. Aantipol aarasar; anbagapillaiidam Veandinaarkolanthaikai; vinayamniranthidavea 

156. Kalvaari paadusolu; kadunthapasupathapillai Ellorumvalthidavey; erakkamakavendinarey 

157. Ramanputhur simaieley; eravananereysamamatbil Paralogathirukumpapam; parivudaneaiivanthaamma 

158. Uthamiyal theadivara; uruthimozhikuruiyavar Nithiyamaiparamsera; nithimozhipeasinarea 

159. Kaithuseitha neraguru; kannaseimeithalaivarannar Theethumuraiseithikettu; theadivanthaarkottaru 

160. Nalangal palapeasi; nalaseerthanthaguru Vilankaikailenthu; vinamudanmuthiseithar 

161. Anjamal nenjuaruntha; vanchakargalsathiseithar Thanchamenakaruthi; thaimariyai than arunthi 

162. Nattin therkolai; nalamanaaralooku Kottaivasalai; gurumaganaikonduvanthaar

163. Annavarin athigari; anbanapillaithan Sonnapedinadungidavea; silanthimarathillkatti 

164. Ennariya makkalangea; eppothumkudinarea Maninpunithanontru; makkalvanthumandiittar 

165. Sevakarai yeathirthargal; serinintaarmakalangea Naviladichathargal; naduvazhithanaipazhithaar 

166. Unnam palaveitharr; uruthimegathankondar Mannan ariyamal; maranakurutanveithar 

167. Thinalaum santhithar; neruidayalkudivanthal Nalamanananbarkalum; nalagurunatharodu 

168. Neanaguru natharvanthar; neajathorvndinirka Ponaadumizhichi pira; puviyorgalathisaika 

169. Orusanthi thavamkathar; uyarvananombukathar Gurumarabinnanmaithanthu; gunamanaassirpettar 

170. Saranam saranamiya; sathyameayesupotti Maranamyeathirparthar; mantadithavamkathar 

171. Sangum mulankavilai; sapthamseiyavaillai Engummownachu; yealunthunadakasonnar 

172. Singaram anguvanthaar; shivaiiipudaisuzha Thangummownathilea; thazhadiavarnadanthar 

173. Kutti nerithinargal; kuraisoluchirithargal Yettisuduvatharkai; yeaduthaarvedikuzhalai 

174. Thoraithanathar seithakulal; thuvagavilanadanthathuamma Tharaithaniyeaaseithakulal; thaivainmelpaithathuamma 

175. Thevetti vezhisathilea; theviramainintargalle Aavatumenasolu; aagavaithanathikari 

176. Moontu vedi painthidavea; munkamimthaarpilaiavar Santtutheadinintarr; sariseithaarkulathanea ada 

177. Thiruppiyea suttargal; thirumaganarsiramsainthaar Kuraparanaikuppitar; kumpiteamaranamanar

178. Malaimelu ozhivesu; maruulagoorvanthargal Silaipolsevarkal; sithariyeaodinargal 

179. Parai madiadikka; pangaithiriariya Kuraiillaathumathi; kudumpavanooryeadutharoo 

180. Kuttuahli suthirargal; kudiulqqvezharar Suttargalvirakaduki; suthamanapillai udal 

181. Nattill amaithiilai; nadargalkolaianal Veedilangaliillai; veethivittarasanmar 

182. Chudukatupola naadu; chuzhchileasikkundu Nadunileathadumarii; nalumthuyarkondu 

183. Arinthaar chiristhavarkazh; athikarathirumaraimum Paranthaaryeaduyealuthu; pakkuvamaiadakidavea 

184. Ullnattu kurugulamum; uyarvanathinalaum Ullqnatuthirumarayoor, ontrukoodithitamitu 

185. Kottar pidathulea; kuzhithontikalketi Nattarpolkudi; nalonaiadaginargal 

186. Kuduahzhi kudamintum; gurumaganaininaiazhuthu Vattamudamkarankupii; vanankitannirukuthama 

187. Maraintha marayorkal; makanayesutharmam Niraivana yesuvinmun; neediyanal vazhuthidavea 

188. Sirantha manitharellam; jeppathaleakaiyeaduthaar Arinthathapasinorum; anuthappamkattinarea 

189. Mannar vazhaveanti; mamaraumvazhgavendi Innalazhigavendu; igameavazhgaveandroo. 

190. Santhoor themmanthiru; kuttiennummuthappan Inteayealuthiveithean; inthathiruammaneai.

.